பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு; வில்லியம் டி. நார்தாஸ், பால் எம். ரோமர் ஆகிய 2 பேருக்கு அறிவிப்பு

2018ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வில்லியம் டி. நார்தாஸ், பால் எம். ரோமர் என்ற 2 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு; வில்லியம் டி. நார்தாஸ், பால் எம். ரோமர் ஆகிய 2 பேருக்கு அறிவிப்பு
Published on

ஸ்டாக்ஹோம்,

மருத்துவம், விஞ்ஞானம், பொருளாதாரம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய சாதனை படைத்தவர்களையும், அமைதிக்காக பாடுபடுபவர்களையும் நோபல் பரிசு அமைப்பு ஆண்டுதோறும் தேர்ந்து எடுத்து நோபல் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த நிலையில், 2018ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வில்லியம் டி. நார்தாஸ், பால் எம். ரோமர் என்ற 2 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவர்கள், பருவ நிலை மாற்றத்துடன் தொடர்புடைய பொருளாதார ஆய்வு மேற்கொண்டதற்காக நோபல் பரிசை பெறுகின்றனர். இவர்களில் வில்லியம் அமெரிக்காவின் நியூ ஹேவன் நகரை சேர்ந்தவர். ரோமர் அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர்.

இவர்களில், நீண்ட கால அடிப்படையிலான, பொருளாதாரத்திற்கு உதவும் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளுக்காக ரோமருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இதேபோன்று, நீண்ட கால மிக பெரிய அளவிலான பொருளாதார ஆய்வுடன் பருவகால மாற்றத்தினை ஒருங்கிணைத்ததற்காக வில்லியமுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com