அணு ஆயுத சோதனை மையத்தை அகற்ற வட கொரியா முடிவு; டிரம்ப் நன்றி

அணு ஆயுத சோதனை மையத்தை அகற்றும் வட கொரியாவின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். #DonaldTrump
அணு ஆயுத சோதனை மையத்தை அகற்ற வட கொரியா முடிவு; டிரம்ப் நன்றி
Published on

வாஷிங்டன்,

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளனர். இந்நிலையில், வடகொரியாவின் வடகிழக்கில் மண்ட்டாப் மலைப்பகுதியில் உள்ள புங்யேரி பகுதியில் அந்நாட்டு அணு குண்டு பரிசோதனை நடத்தும் மையத்தையும், ரகசிய சுரங்கங்களையும் 23ம் தேதி முதல் 25-ம் தேதிக்குள் அகற்றி விட அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் அணு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையங்கள், பாதுகாப்பு சாவடிகளும் முற்றிலுமாக அகற்றப்படும் என அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அணு குண்டு சோதனை மையத்தை அகற்றும் வட கொரியாவின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிரம்ப் தனது டுவிட்டரில், 'எங்கள் சந்திப்பு நடப்பதற்கு முன்னதாகவே அணு குண்டு சோதனை மையத்தை அகற்ற போவதாக வடகொரியா அறிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த உறுதியான நடவடிக்கைக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com