வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
Published on

சியோல்,

அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களுக்குமுன் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது.

இந்நிலையில், தற்போது மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. வடகொரியாவில் இருந்து நேற்று ஏவப்பட்ட இந்த ஏவுகணை 1 ஆயிரத்து 100 கிலோ மீட்டர் பயணித்து வடகிழக்கு கடல் பகுதியில் விழுந்தது. 2025ம் ஆண்டு வடகொரியா நடத்திய முதல் ஏவுகணை சோதனை இதுவாகும். இந்த ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com