அடங்காத வடகொரியா: நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை

உலக நாடுகளின் எச்சரிக்கையை பொருட்படுத்தாது வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
அடங்காத வடகொரியா: நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை
Published on

சியோல்

புதிய ஏவுகணை சோதனை ஒன்றை வட கொரியா செய்து பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு கரை பகுதியிலிருந்து நடத்தப்பட்ட சோதனையில் எந்த வகையான ஏவுகணை பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகாத நிலையில், சமீப காலமாக வட கொரியா சோதனை செய்து வரும் பலிஸ்டிக் (ballistic) ஏவுகணையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஏவப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஏவுகணையை வடகொரியா ஜப்பானின் கடற்பரப்பில் செலுத்தி சோதனை நடத்தி உள்ளது என தென்கொரியா தெரிவித்து உள்ளது. வடகொரியா ஜனவரி மாதம் ஏவுகணையை சோதனை செய்தது. இது "உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்" என்று கூறப்பட்டது.

மேலும் வட கொரியா சமீபத்தில் பல ஏவுகணை சோதனைகளை நடத்தியது, இதில் ஹைப்பர்சோனிக் மற்றும் நீண்ட தூர ஆயுதங்கள் என்று கூறப்பட்டது. தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைமை அதிகாரிகள் கூறியதாவது: -

வட கொரியாவின் கிழக்கே உள்ள சின்போ துறைமுகத்தில் இருந்து ஒரு ஏவுகணை ஏவப்பட்டது, அங்கு பவடகொரியா வழக்கமாக அதன் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தளமாகக் கொண்டது. இது ஜப்பான் கடல் என்று அழைக்கப்படும் கிழக்கு கடலில் தரையிறங்கியது.நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையாக இது இருக்கலாம் சந்தேகிக்கப்படுவதாக அவர்கள் கூறினர்.

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், இந்த செயல் மிகவும் வருந்தத்தக்கது என்றும் கூறி உள்ளார். இதற்கிடையே தென் கொரியாவில் அடெக்ஸ் எனப்படும் சர்வதேச விமானம் மற்றும் ராணுவ கண்காட்சியின் தொடக்க விழாவுக்காக உலகம் முழுவதிலிருந்தும் பல பிரதிநிதிகள் கூடியுள்ள நிலையில், தென் கொரியாவின் மிகப் பெரிய ராணுவ கண்காட்சி நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com