அணு ஆயுத திட்டத்தில் நாம் முழுமை அடைந்துள்ளோம் வடகொரியா தலைவர் பெருமிதம்

அணு ஆயுத திட்டத்தில் நாம் முழுமை அடைந்துள்ளோம் என வடகொரியா தலைவர் கூறி உள்ளார்.
அணு ஆயுத திட்டத்தில் நாம் முழுமை அடைந்துள்ளோம் வடகொரியா தலைவர் பெருமிதம்
Published on

வடகொரியா கடந்த சில ஆண்டுகளாகவே அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவை தாக்கும் விதமாக ஏவுகணை சோதனைகளை நடத்துகிறது. இதனால் ஐ.நா. சபை பல்வேறு பொருளாதார தடைகளை வடகொரியா மீது விதித்துள்ளது.

இருப்பினும், இதற்கெல்லாம் கட்டுப்படாத வடகொரியா தொடர்ந்து சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், நேற்று ஜப்பான் வான்வழியாக பறந்து செல்லும் வகையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. இது ஜப்பானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஏவுகணை ஜப்பான் வழியாக பறப்பது குறித்து கேப் எரிமோ நகரில் தொடர்ந்து பொது மக்களுக்கு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இதனால் பல லட்சம் ஜப்பானியர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.

வடகொரியாவின் அத்துமீறிய செயலுக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது ஐநா மனித உரிமை கவுன்சிலும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆனால் இது குறித்து கவலைப்படாத வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் வெளியிட்டுள்ள அறிக்கையில் நமது நாடு அமெரிக்கா தனது இராணுவ வலிமையில் "சமநிலை" என்ற இலக்கை அடைந்துள்ளது. அணு ஆயுத உற்பத்தியில், நிர்ணயித்த இலக்கை எட்டும் வரையில் உற்பத்தியைத் தொடர்வோம் பல தசாப்தங்களாக ஐ.நா. தடைகள் நீடித்திருந்தாலும் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படும் பல சாதனைகளை நாம் செய்துள்ளோம்.நம் நாட்டின் இறுதி இலக்கு "என்பது அமெரிக்காவுடன் உண்மையான சக்தியின் சமநிலையை நிலைநிறுத்துவதாகும். அணு ஆயுத திட்டத்தில் நாம் முழுமை அடைந்துள்ளோம் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com