வடகொரியா ஏவுகணை சோதனையால் பரபரப்பு; உஷார் நிலையில் ஜப்பான், தென்கொரியா

பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் ஏற்கனவே ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்திருக்க கூடும் என நம்பப்படுகிறது.

வடகொரியா ஏவுகணை சோதனையால் பரபரப்பு; உஷார் நிலையில் ஜப்பான், தென்கொரியா
Published on

டோக்கியோ

ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள வடகொரியா நாட்டில் இருந்து இன்று காலை 6 மணியளவில், பல்வேறு பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை ஏவி அந்நாடு சோதனையில் ஈடுபட்டது. அவை ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு அருகே சென்று விழுந்துள்ளன. இதனால், அந்த பிராந்தியத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து ஜப்பான் படைகள் உஷாராகியுள்ளன. இந்த தகவலை அந்நாட்டு பிரதமர் சனே தகாய்ச்சி உறுதி செய்ததுடன் இதுபற்றி அவர் கூறும்போது, பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் ஏற்கனவே ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்திருக்க கூடும் என நம்பப்படுகிறது.

இந்த தகவலை ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் தற்போது ஒருங்கிணைந்து ஆய்வு செய்து வருகின்றன என கூறினார்.

உடனடியாக தகாய்ச்சி தலைமையில் அவசரகால கூட்டமும் கூடியது. தகவல்கள் எல்லாவற்றையும் சேகரித்து, பகுப்பாய்வு செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள தொடர்புடைய அமைச்சகங்களுக்கு உத்தரவிட்டு உள்ளேன் என்று தகாய்ச்சி கூறியுள்ளார். வடகொரியாவின் சோதனையால் ஜப்பான் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com