வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலையில் நிலவி வருகிறது.
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
Published on: 

பியோங்யாங்,

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

கண்ணிவெடி

மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் வடகொரியா பல முறை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

இதனிடையே, கடந்த 21ம் தேதி இருநாட்டு எல்லையில் கண்ணிவெடி வெடித்தது. இந்த வெடி விபத்தில் தென் கொரிய வீரர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர். எல்லையில் கண்ணிவெடிகளை வடகொரியா பதுக்கி வைத்ததாக தென் கொரியா குற்றஞ்சாட்டியது.

ஏவுகணை சோதனை

இந்நிலையில், வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. வடகொரியாவின் துறைமுக நகரமான வின்சன் நகரில் இருந்து 12 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது. இந்த ஏவுகணைகள் வடகொரியாவில் இருந்து 250 கிலோ மீட்டர் தூரம் சென்று கடல் பகுதியில் விழுந்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலையில் நிலவி வருகிறது.

X