வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
Published on

சியோல்,

அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது.

இந்நிலையில், தற்போது மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. எதிரி நாட்டு போர் விமானங்களை தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, தென்கொரியா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்ட நிலையில் அதற்கு பதிலடியாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com