

பியாங்யாங்,
கடலுக்கு அடியில் இருந்து அணு ஆயுத ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது வடகொரியா.
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா தொடர்ந்து அதிநவீன ஏவுகணைச் சோதனைகளை நடத்தி சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப் பாக, அமெரிக்கா மற்றும் தென்கொரிய நாடுகளைக் குறிவைத்து வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் பல்வேறு அதிரடி ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், டிரம்பின் பேச்சுவார்த்தை முயற்சிகளை நிராகரித்த வடகொரியா, சுமார் 3 ஆண் டுகளுக்குப் பிறகு முதன்முறையாக கடலுக்கு அடியிலிருந்து ஏவுகணை சோதனை நடத்தியுள் ளது. 'ஹெரோ கிம் குன் ஒக்' என்ற அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இந்த அணு ஆயுத ஏவுகணைகள் ஏவப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம் தரைவழி மட்டுமின்றி, கடல்வழியாகவும் எப்போது வேண்டுமானாலும் அணு ஆயு தத் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்காவுக்கு வடகொரியா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ரகசிய நீர்மூழ்கித் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிவது கடினம் என்பதால், அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவம் தற்போது பெரும் பீதியில் உறைந்துள்ளன.