தென் கொரியாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு வடகொரியா தனது குழுவை அனுப்புகிறது

தென் கொரியாவில் நடைபெறும் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு வடகொரியா சார்பில் வீரர்கள் குழு அனுப்பப்படும் என்று வட கொரியா அறிவித்துள்ளது.#2018WinterOlympic #NorthKorea #SouthKorea
தென் கொரியாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு வடகொரியா தனது குழுவை அனுப்புகிறது
Published on

சியேல்

வட கொரியா ஏவுகணை ஏவிய பிறகு, கேசோங் தொழில் மண்டலத்தின் கூட்டு பொருளாதார திட்டத்தை தென் கொரியா இடைநிறுத்தியது முதல் இரு நாடுகள் இடையிலான உறவுகள் மோசமடைந்தது.இவ்விரு நாடுகளுக்கும் இடையே கடைசியாக உயர்மட்ட பேச்சுவார்த்தைகள், 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் வட கொரியாவும் தென் கொரியாவும் முதல்முறையாக உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்கு இன்று சந்திக்க உள்ளன.

பன்முன்ஜோமில் 'சமாதான கிராமம்' என அழைக்கப்படும் பகுதியில் உள்ள 'அமைதி மாளிகையில்' உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெற்றது. உள்ளது.

பிப்ரவரி மாதம் தென் கொரியாவில் நடக்க உள்ள 2018 குளிர் கால ஒலிம்பிக் போட்டிகளில் வட கொரியா கலந்துகொள்வதற்கான சாத்தியங்கள் குறித்து இதில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் பேச்சு வார்த்தைக்கு பிறகு தென் கொரியாவில் நடைபெறும் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு வடகொரியா சார்பில் வீரர்கள் குழு அனுப்பப்படும் என்று வட கொரியா அறிவித்துள்ளது.இந்த குழுவில் வீரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அடங்குவர்.

கொரிய தீபகற்பத்தில் இவ்விரு நாடுகளால் எப்போதும் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இவ்விரு நாடுகளின் பேச்சுவார்த்தை உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

#2018WinterOlympic #KimJongun #NorthKorea #SouthKorea

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com