'வடகொரிய அதிபர் கிம் புத்திசாலி' - டிரம்ப் புகழாரம்


வடகொரிய அதிபர் கிம் புத்திசாலி - டிரம்ப் புகழாரம்
x

வடகொரிய அதிபர் கிம் புத்திசாலி என்று டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 20-ந்தேதி பதவியேற்றார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

இந்த நிலையில், வடகொரிய அதிபர் கிம் புத்திசாலி என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் டிரம்ப் இதனை தெரிவித்தார்.

மேலும் வடகொரிய அதிபர் ஒரு மத வெறியர் அல்ல என்று குறிப்பிட்ட டிரம்ப், விரைவில் அவரை தொடர்பு கொண்டு பேச உள்ளதாக தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story