வடகொரியா தலைவர் உயிருடன் இருக்கிறார் - தென் கொரியா உறுதி

வடகொரியா தலைவர் உயிருடன் இருக்கிறார் என தென் கொரிய அதிபரின் பாதுகாப்பு ஆலோசகர் உறுதிபடுத்தி உள்ளார்.
வடகொரியா தலைவர் உயிருடன் இருக்கிறார் - தென் கொரியா உறுதி
Published on

சியோல்,

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் "உயிருடன் இருக்கிறார்" என்று தென் கொரிய அதிபரின் மூன் ஜே-இன் உயர் பாதுகாப்பு ஆலோசகர் கூறி உள்ளார்.

அமெரிக்க ஆதாரங்களின் படி எந்த உறுதியான தகவலும் இல்லை என்றாலும், கிம் இறந்துவிட்டதாக ஹாங்காங் சேட்டிலைட் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து வட கொரியாவின் தலைவரான கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்ள சீனா மருத்துவர்கள் குழுவை வட கொரியாவுக்கு

அனுப்பியது.

இந்த நிலையில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் "உயிருடன் இருக்கிறார்" என்று தென் கொரிய அதிபரின் மூன் ஜே-இன் உயர் பாதுகாப்பு ஆலோசகர் கூறி உள்ளார்.

அதிபரின் மூன் ஜே-இன்னின் பாதுகாப்பு சிறப்பு ஆலோசகர் மூன் சுங்-இன் சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

எங்கள் அரசாங்க நிலைப்பாடு உறுதியானது. கிம் ஜாங் உன் உயிருடன் நலமாக இருக்கிறார். நாட்டின் கிழக்கில் உள்ள ரிசார்ட் நகரமான வொன்சனில் கிம் தங்கி உள்ளார். ஏப்ரல் 13 முதல், இதுவரை சந்தேகத்திற்கிடமான விவகாரங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com