அரச பொறுப்புகளை துறந்தார் நார்வே இளவரசி! மாற்று மருத்துவம் குறித்த ஆய்வில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு

நார்வே இளவரசி தனது அரச கடமைகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அரச பொறுப்புகளை துறந்தார் நார்வே இளவரசி! மாற்று மருத்துவம் குறித்த ஆய்வில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு
Published on

ஓஸ்லோ(நார்வே),

நார்வே இளவரசி மார்த்தா லூயிஸ், பிரபல ஆப்பிரிக்க அமெரிக்க ஹாலிவுட் ஆன்மீக ஆசிரியர் டியூரெக் வெர்ரெட் என்பவரை காதலித்து வருகிறார்.

இந்நிலையில், தனது அரச கடமைகளில் இருந்து விலகுவதாக நார்வே இளவரசி மார்த்தா லூயிஸ் அறிவித்துள்ளார். கேன்சர் போன்ற தீவிர நோய்கள் குறித்து ஆய்வு செய்யவும், மாற்று மருத்துவத்தில் ஈடுபட உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இளவரசி மார்த்தா லூயிஸ்-ஆன்மீக ஆசிரியர் டியூரெக் வெர்ரெட் ஜோடி மாற்று மருத்துவம் குறித்த ஆய்வில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது. இது குறித்து இளவரசி மார்த்தா லூயிஸ் கூறியிருப்பதாவது, "நோயாளிகளுக்கு வழக்கமான மருத்துவத்துடன், மாற்று மருத்துவ முறைகள்(யோகா, தியானம், அக்குபஞ்சர்) மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

இந்த விஷயத்தை நார்வே அரச குடும்பமும் உறுதி செய்துள்ளது. 51 வயதான நார்வே இளவரசி மார்த்தா லூயிஸ், தனது 'இளவரசி' பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வார், ஆனால் எந்த வணிக நடவடிக்கைகளிலும் அதைப் பயன்படுத்த மாட்டார் என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com