எல்லைப்பிரச்சினை குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு சீனா வரவேற்பு

எல்லைப்பிரச்சினை குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது.
எல்லைப்பிரச்சினை குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு சீனா வரவேற்பு
Published on

பெய்ஜிங்,

ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற சர்வதேச பெருளாதார மாநாட்டில் உரையாற்றினார். அப்போது, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை உள்ளது உண்மை தான். ஆனால், கடந்த 40 வருடங்களில், எல்லை பிரச்சனை காரணமாக ஒரு துப்பாக்கி குண்டு கூட வெடிக்கப்படவில்லை என்று மோடி பேசினார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் கூறியதாவது:- பிரதமர் மோடியின் நேர்மறையான கருத்தை நாங்கள் கவனத்தில் கொண்டோம். மோடியின் இந்த கருத்தை நாங்கள் வரவேற்கிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com