பிடனுடனான விவாதம் நேரத்தை வீணடிப்பது 15 ந்தேதி ஆன் லைன் விவாதத்தில் இருந்து டிரம்ப் வெளியேறினார்

பிடனுடனான அக்டோபர் 15 ஜனாதிபதி விவாதத்தில் இருந்து டிரம்ப் வெளியேறினார் அவருடனான விவாதம் ‘நேரத்தை வீணடிப்பது’ என்று கூறி உள்ளார்.
பிடனுடனான விவாதம் நேரத்தை வீணடிப்பது 15 ந்தேதி ஆன் லைன் விவாதத்தில் இருந்து டிரம்ப் வெளியேறினார்
Published on

வாஷிங்டன்

கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிரான முன்னெச்சரிக்கையாக இது நடத்தப்பட்டால், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனுடன் அடுத்த விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார்.

இல்லை நான் ஒரு மெய்நிகர் விவாதத்தில் எனது நேரத்தை வீணாக்கப் போவதில்லை என்று டிரம்ப் வியாழக்கிழமை ஃபாக்ஸ் பிசினஸுக்கு அளித்த தொலைபேசி பேட்டியில் கூறினார்.

ஆனால், இதுகுறித்து ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

கடந்த 1-ம் தேதி டிரம்ப்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஆனால், டிரம்ப்புக்கு காய்ச்சல் தீவிரமடைந்ததால் மேரிலாண்ட் மாகாணம் பெத்தெஸ்டாவில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் கடந்த 2-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்துகள் தரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் 4 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு டிரம்ப் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடற்படை ஹெலிகாப்டர் மூலம் அவர் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com