

காபுல்,
தலீபான் பயங்கரவாதிகளின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் காணப்படவில்லை என்று ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், ஆப்கானிஸ்தான் அரசின் அமைதிப் பேச்சுவார்த்தை குழு, தலீபான் பயங்கரவாதிகளின் அணுகுமுறையில் எந்த மாற்றத்தையும் காணவில்லை. இது அமெரிக்க படையெடுப்புக்கு முன்பு அவர்கள் ஆட்சியில் இருந்தபோது இருந்ததை விட மிகவும் வித்தியாசமாக தெரியவில்லை என்று ஹம்துல்லா மொஹிப் தெரிவித்தார்.