அணு ஆயுதமற்ற உலகம்

இன்று, உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினையாகக் கருதப்படுவது பருவநிலை மாற்றம். அதற்கு அடுத்த இடத்தில் உள்ள பிரச்சினை, அணு ஆயுதம்.
அணு ஆயுதமற்ற உலகம்
Published on

அணு ஆயுதங்கள் வெடித்தால் பூமி இப்போதிருக்கும் நிலையைவிடப் பல மடங்கு சூடாகி, உலகின் பருவநிலை மேலும் கொதிநிலையை அடையும். அப்போது மனிதர்கள் இறப்பதைக் காட்டிலும், அணு ஆயுதங்கள் வெடிக்கும் நொடியில், மரணிக்கும் ஜீவன்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

அண்டை நாடுகள் தொடுக்கும் போர்களைச் சமாளிக்க அணு ஆயுதங்களைக் கொண்டிருப்பதாக எல்லா நாடுகளும் சொல்கின்றன. ஆனால், அதைப் பயன்படுத்தும் முதல் நாடாக நாங்கள் இருக்க மாட்டோம் என்று நேர்மறையாக சொல்கின்றன. பல நேரம் போர்களைவிட நாடுகளுக்கு இடையேயான, அதிபர்களுக்கு இடையேயான இணக்கமற்ற தன்மைதான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் அளவுக்கு கொண்டு செல்கிறது. சமகால உதாரணம், அமெரிக்காவும், வடகொரியாவும்.

அணு ஆயுதங்களின் விளைவுக்கு உதாரணமாக, ஹிரோஷிமாவும், நாகசாகியும் நம் கண் முன்னே சாட்சியாக இருக்கின்றன. எனவே, இன்னொரு அணுகுண்டு வீச்சு தேவையில்லை என்ற எண்ணத்தில் விஞ்ஞானிகள், சமூகச் செயல்பாட்டாளர்கள் என பலர் இணைந்து 2007-ம் ஆண்டில் ஏற்படுத்தியதுதான் ஐகேன் அமைப்பு. சுமார் 101 நாடுகளைச் சேர்ந்த, அணு ஆயுதங்களுக்கு எதிரான 468 அமைப்புகள் இதில் உறுப்பினராக உள்ளன.

சுமார் 122 நாடுகள், இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு இதில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம், சர்வதேச சட்டமாக மாற 50 நாடுகள் தங்கள் நாட்டில் இந்த ஒப்பந்தத்தைச் செல்லத்தக்கதாக, உறுதிசெய்தால் போதும். இந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து ஒன்பது நாடுகள் மட்டும் விலகிவிட்டன. அதில் இந்தியாவும் ஒன்று.

அணு ஆயுதங்கள் சட்ட விரோதமானவை. அவற்றைப் பயன்படுத்துவேன் என்று மிரட்டுவதும் சட்ட விரோதமானது. அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை அவமானகரமானதாக மாற்ற வேண்டும். அதன் மூலம் அந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாததாகவும், அநீதியானதாகவும் மாற்ற வேண்டும். இப்படி எல்லா நாடுகளும் செய்வதன் மூலம் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளுக்கு நெருக்கடி நிலையை உருவாக்க முடியும். ஒரு கட்டத்தில் அந்த நாடுகளும் அணு ஆயுதங்களைக் கைவிடும். அப்போது, அணு ஆயுதங்கள் இல்லாத ஒரு உலகம் பிறக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com