ஈரான்-அமெரிக்கா அணுசக்தி பேச்சு முடிவின்றி முடிந்தது: அடுத்த சுற்று பேச்சு எப்போது?

தோஹாவில் ஈரான்-அமெரிக்கா அணுசக்தி பேச்சு முடிவின்றி முடிந்தது. அடுத்த சுற்று பேச்சு எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Image Courtacy: AFP
Image Courtacy: AFP
Published on

தோஹா,

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தம், ஈரான் யுரேனியம் செறிவூட்டல் திறன், செறிவூட்டல் நிலை, கையிருப்பு ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கவும், நட்டான்ஸ் நகரைத் தவிர்த்து பிற இடங்களில் செறிவூட்டும் மையம் அமைப்பதை தடுக்கவும் வகை செய்தது. இதற்காக ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது செய்து கொண்ட இந்த ஒப்பந்தம் அமெரிக்க நலனுக்கு எதிரானது என அவருக்கு பின் அங்கு ஜனாதிபதியாக வந்த டிரம்ப் கருதினார். இதனால் அந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொண்டது. அதன்பின்னர் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. இந்த நிலையில், உலக வல்லரசு நாடுகளுடன் ஈரானின் சிதைந்த அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மறைமுக பேச்சு வார்த்தை கத்தார் நாட்டின் தலைநகரான தோஹா நகரில் நடந்தது. 2 நாட்களாக நடந்து வந்த இந்த பேச்சுவார்த்தை, எந்த முடிவும் எட்டப்படாமல் முடிந்து விட்டது.

இதற்கிடையே ஈரான் தனது அணுசக்தி தளங்களில் சர்வதேச ஆய்வாளர்களின் கண்காணிப்பு கேமராக்களை மூடி விட்டது. தற்போது ஈரானிடம் ஒரு அணுகுண்டு தயாரிக்கக்கூடிய அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தோஹா பேச்சுவார்த்தை முடிவின்றி முடிந்ததற்காக ஈரானும், அமெரிக்காவும் ஒன்றையொன்று குற்றம் சாட்டி உள்ளன. அடுத்த சுற்று பேச்சு வார்த்தை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com