3ம் ஆண்டு நினைவு தினம்; அக்.7 ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இஸ்ரேலில் அஞ்சலி

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்
3ம் ஆண்டு நினைவு தினம்; அக்.7 ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இஸ்ரேலில் அஞ்சலி
Published on: 

ஜெருசலேம்,

2023 அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இஸ்ரேலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஹமாஸ் தாக்குதல்

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி அதிகாலை இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனை மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. மேலும், பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டது. பணய கைதிகளில் பலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்டனர்.

அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்து காசா முனையில் இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 74 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். தற்போது இந்த போர் ஒப்பந்த அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளது.

3ம் ஆண்டு நினைவு தினம்

இந்நிலையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இன்று அஞ்சலி செலுத்தினர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முக்கிய அரசியல் கட்சியினரும் இந்த நினைவு தினத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com