சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்த வாழைப்பழ பெட்டியில் கிலோ கணக்கில் போதைப்பொருள் - பெட்டியை மாற்றி அனுப்பிய கும்பல்

வாழைப்பழங்கள் வந்த பெட்டியில் 840 கிலோ போதைப்பொருள் இருந்ததை கண்டு சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
Published on

ப்ரக்யூ,

மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிரித்து வருகிறது. வித்தியாசமான முறையில் கடத்தல்காரர்கள் போதைபொருளை கடத்தி வருகின்றனர். இவற்றை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசின் ஜிசின் மற்றும் ரிஷொனொவ் நட் ஹ்கினுவ் என்ற பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு வெளிநாட்டில் இருந்து வாழைப்பழ பெட்டிகள் வந்தன.

வாழைப்பழங்கள் வந்த பெட்டியை சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் பிரித்து உள்ளே இருந்த பழங்களை எடுத்துள்ளனர். அப்போது, அந்த வாழைப்பழ கூடைக்குள் பல்வேறு நிறங்களில் பார்சல்கள் இருந்தன.

அந்த பார்சலை திறந்து பார்த்த சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் அதில் கொக்ய்ன் போதைபொருள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்த போலீசார், வாழைப்பழ பெட்டிகளில் இருந்து கிலோ கணக்கில் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மொத்தம் 840 கிலோ போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 5 ஆயிரம் கோடி என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்த வாழைப்பழ கூடைகள் எந்த நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு இடத்திற்கு அனுப்புவதற்கு பதிலாக போதைபொருள் கும்பல் கிலோ கணக்கில் போதைப்பொருளை தவறுதலாக சூப்பர் மார்க்கெட்டிற்கு அனுப்பி வைத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com