அர்ஜென்டினாவில் கனமழை, வெள்ளம்; பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

அர்ஜென்டினாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.
அர்ஜென்டினாவில் கனமழை, வெள்ளம்; பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு
Published on

பியூனோஸ் அயர்ஸ்,

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு அர்ஜென்டினா. அந்நாட்டின் பியூனோஸ் அயர்ஸ் மாகாணம் பாஹியா பிளான்கா நகரில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்துவருகிறது.

கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கனமழை, வெள்ளத்தால் ஏற்கனவே 10 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி, அர்ஜென்டினா கனமழை, வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். அதேவேளை, வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமாகினர். கனமழை தற்போது நின்றுள்ள நிலையில் மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com