கடலின் அடிமட்டத்தில் துளையிட்டு கச்சா எண்ணெய் எடுக்கும் கப்பல் மூழ்கி விபத்து; 4 பேர் பலி


கடலின் அடிமட்டத்தில் துளையிட்டு கச்சா எண்ணெய் எடுக்கும் கப்பல் மூழ்கி விபத்து; 4 பேர் பலி
x
தினத்தந்தி 2 July 2025 2:36 PM IST (Updated: 2 July 2025 5:42 PM IST)
t-max-icont-min-icon

இந்த விபத்தில் 22 பேர் சிறு காயங்களுடன் மீட்கபட்டனர்.

கெய்ரோ,

கடலின் அடிமட்டத்தில் எராளமான தாதுக்கள், கச்சா எண்ணெய் உள்பட பல்வேறு வளங்கள் உள்ளன. இதனிடையே, கடலின் அடிமட்டத்தில் உள்ள கச்சா எண்ணெய் இருக்கும் பகுதிகளை கண்டறிந்து அவற்றை வெளியே எடுக்கும் வகையில் கப்பல்கள் உள்ளன. பல்வேறு பெருநிறுவனங்கள் இந்த கப்பல்கள் மூலம் கடலின் அடிமட்டத்தில் உள்ள கச்சா எண்ணெய்யை எடுத்து சுத்திகரித்து விறனை செய்கின்றன.

இந்நிலையில், செங்கடலில் எகிப்தின் ரஸ் ஹர்பெல் நகர் அருகே சூயஸ் கால்வாய் பகுதியில் கச்சா எண்ணெய் கப்பல் கடலின் அடிமட்டத்தை துளையிட்டு கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. கப்பலில் 30 ஊழியர்கள் பணியாற்றினார். அந்த கப்பலில் நேற்று திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் கப்பல் கடலில் மூழ்கியது. இந்த சம்பவத்தில் கப்பலில் பணியாற்றிய 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 22 பேர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர். எஞ்சிய 4 பேர் கடலில் மூழ்கி மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story