இலங்கையில் தீப்பிடித்து எரியும் எண்ணெய் கப்பல் - சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க தீவிர முயற்சி

இலங்கையில், கப்பலில் பிடித்த தீயை அணைக்க இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான சவுரியா, சரங் மற்றும் சமுத்ரா என 3 கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் தீப்பிடித்து எரியும் எண்ணெய் கப்பல் - சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க தீவிர முயற்சி
Published on

கொழும்பு,

இலங்கையில், கப்பலில் பிடித்த தீயை அணைக்க இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான சவுரியா, சரங் மற்றும் சமுத்ரா என 3 கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பனாமா நாட்டுக்கு சொந்தமான 'நியூ டைமண்ட்' என்ற கப்பல், கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு குவைத்தில் இருந்து இந்தியாவுக்கு பயணித்தது.

அதில் மாலுமி பொறியாளர்கள் உள்பட 23 ஊழியர்கள் இருந்தனர். இந்நிலையில், அம்பாறை சங்கமன்கந்தை பகுதியின் கிழக்கு கடல் பகுதியில் அந்தக் கப்பல் தீப்பிடித்தது. சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் பேரல்களுடன் எரிவதை அணைக்க ரஷ்ய பேர்க்கப்பல் களமிறங்கி உள்ளது. இலங்கையும் பேராடி வரும் நிலையில் இந்தியா தனது கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது.

கப்பலில் பயணம் செய்த 23 ஊழியர்களில் 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்தார். இதற்கிடையே, கச்சா எண்ணெய் படலம் ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க இந்திய கடலோர கடற்படை தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த பணியில் 6 கடற்படை கப்பல்களும், 2 விமானங்களும் ஈடுபட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com