

மஸ்கட்,
ஓமன் புள்ளியியல் மற்றும் தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஓமன் நாட்டின் மக்கள் தொகை கடந்த 2020-ம் ஆண்டு 44 லட்சத்து 81 ஆயிரத்து 42 ஆக இருந்தது. தற்போது நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை 45 லட்சத்து 27 ஆயிரத்து 446 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கடந்த ஒரு ஆண்டில் மக்கள்தொகையானது 1.04 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் ஓமன் நாட்டைச் சேர்ந்தவர்கள் 61.94 சதவீதமும், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் 38.06 சதவீதமும் உள்ளனர். அல் தகிலியா பகுதியில் அதிகமாகவும், முசந்தம் பகுதியில் குறைவாகவும் உள்ளது.
இவ்வாறு அந்த மையம் தெரிவித்துள்ளது.