ஒமைக்ரான் வைரஸ் டெல்டாவை விட குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும் - உலக சுகாதார அமைப்பு

ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வைரசை விட குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் டெல்டாவை விட குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும் - உலக சுகாதார அமைப்பு
Published on

வாஷிங்டன்,

2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே டெல்டா, பீட்டா, காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது.

இதற்கிடையில், தற்போது கொரோனா வைரஸ் மேலும் உருமாற்றமடைந்துள்ளது. ஒமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வைரஸ் 50 உருமாற்றங்களை கொண்டுள்ளதால், அதிவேகமாக பரவக்கூடியதாக இருக்கலாம் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த ஒமைக்ரான் வைரஸ் இந்தியா உள்பட 25-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸ் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறுகையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் சுலபமாக பரவலாம். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் ஒமைக்ரான் பரவலாம். ஆனால், டெல்டா வைரசுடன் ஒப்பிடும் போது ஒமைக்ரான் வைரஸ் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும் என்பதற்கு சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com