

ஜெனீவா,
கொரோனாவின் மாறுபாடான ஒமைக்ரான், டெல்டா வகையை விட வேகமாக பரவி வருகிறது. இது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.
ஏற்கெனவே நோயிலிருந்து மீண்டவர்களையும் ஒமைக்ரான் தாக்கி வருகின்றது. இது தற்போது டெல்டாவை விட வேகமாக பரவி வருவதற்கான ஆதாரங்கள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும், நோயிலிருந்து மீண்டவர்களும், மீண்டும் ஒமைக்ரானால் பாதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அவர் ஜெனீவாவை தளமாகக் கொண்ட புதிய தலைமையக கட்டிடத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.