ஒமைக்ரான் நுழைந்து விட்டது: தடுப்பூசியே நம்மை பாதுகாக்கும் - வெனிசுலா அதிபர்

வெனிசுலா நாட்டில் முதல் முறையாக 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் நுழைந்து விட்டது: தடுப்பூசியே நம்மை பாதுகாக்கும் - வெனிசுலா அதிபர்
Published on

கராகஸ்,

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாற்றம் பெற்ற புதிய வகை ஒமைக்ரான் தொற்று ஒரு மாத காலத்தில் ஏறக்குறைய 106 நாடுகளில் பரவி உள்ளது. இந்த நிலையில், வெனிசுலா நாட்டில் முதல் முறையாக 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மடுரோ கூறியதாவது:-

'முதல் 7 ஒமைக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர்க்க முடியாதது. ஒமைக்ரான் நமது நாட்டிற்குள்ளும் வந்து விட்டது. ஒமைக்ரான் தீவிரமாக தொற்றும் தன்மை கொண்டது. தடுப்பூசி போடுவது மட்டுமே ஒமைக்ரான் தொற்றிலிருந்து பாதுகாக்கும்' என்று அவர் கூறியுள்ளார்.

ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பனாமா, ஸ்பெயின் மற்றும் டொமினிக்கன் குடியரசில் இருந்து வந்தவர்கள் என்று வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான் பரவலின் காரணமாக பல்வேறு நாடுகள் தங்களின் எல்லைகளை மூடியுள்ளன. பல நாடுகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மற்றும் கொரோனா தொற்று இல்லாத வெளிநாட்டு பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com