

நியூயார்க்,
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் அருகே உள்ள எண்ணெய் வயல் மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த 2 தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா மற்றும் அரபு நாடுகள் குற்றம்சாட்டின. ஆனால் ஈரான் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஏமன் கடல் பகுதியில் சட்டவிரோதமாக ஆயுதம் ஏற்றி சென்ற சரக்கு கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது. கப்பலில் இருந்த ஆயுதங்கள் ஈரானுக்கு சொந்தமானவை என விசாரணையில் தெரியவந்தது. எனினும் ஈரான் இது குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் சவுதி அரேபியா என்ன வெயில் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் அமெரிக்கா கைப்பற்றிய ஆயுதங்களும் ஒரே மாதிரியாக இருப்பதாக ஐநா தற்போது தெரிவித்துள்ளது. இந்த தகவலை ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து சர்வதேச அளவில் விசாரணை தீவிரப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.