இஸ்ரேல்: பயங்கரவாதி நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

இந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
இஸ்ரேல்: பயங்கரவாதி நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
Published on

ஜெருசலேம்,

இஸ்ரேலின் கொவச் யாஹிர் நகரில் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்கில் வாடிக்கையாளர்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்தனர்.

பயங்கரவாத தாக்குதல்

அப்போது அங்கு காரில் வந்த 2 பயங்கரவாதிகள், அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச்சென்று அருகில் உள்ள பகுதிகளிலும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர், துப்பாக்கி சூடு நடத்திய ஒரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர். மற்றொரு பயங்கரவாதியை கைது செய்தனர்.

துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதி உமர் யாசின் என்பதும், இஸ்ரேலின் டயிபி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com