சீனாவில் வெடிவிபத்தில் ஒருவர் பலி; 33 பேர் காயம்

சீனாவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியானார். 33 பேர் காயமடைந்து உள்ளனர்.
சீனாவில் வெடிவிபத்தில் ஒருவர் பலி; 33 பேர் காயம்
Published on

ஷென்யாங்,

சீனாவில் லையாவோனிங் மாகாணத்தில் ஷென்யாங்க நகரில் உணவு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், இன்று வெடிவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். 33 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதுபற்றி வெளியான வீடியோவில், அந்த தெரு முழுவதும் கட்டிட இடிபாடுகள் பரவி கிடந்தன.

இந்த வெடிவிபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com