சிரியா ரசாயன தாக்குதல் விவகாரம்; அவசரகால பேச்சுவார்த்தை தொடங்கியது

சிரியாவில் சந்தேகத்திற்குரிய வகையிலான ரசாயன ஆயுத தாக்குதல் பற்றி அவசரகால பேச்சுவார்த்தை இன்று தொடங்கியுள்ளது. #PoisonGasAttack
சிரியா ரசாயன தாக்குதல் விவகாரம்; அவசரகால பேச்சுவார்த்தை தொடங்கியது
Published on

தி ஹேக்,

சிரியாவில் அதிபர் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு ரஷ்ய ராணுவம் ஆதரவு அளித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 2ந்தேதி டமாஸ்கஸ் அருகே கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டூமா நகரை கைப்பற்ற ரஷ்ய ஆதரவு பெற்ற சிரிய அரசு படைகள் முற்றுகையிட்டன.

இந்த நிலையில், கிழக்கு கூட்டா பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான ரசாயன தாக்குதலில் 70 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் வெளியானது.

ஹெலிகாப்டர் ஒன்றில் இருந்து சரீன் என்ற நச்சு ரசாயன பொருள் அடங்கிய வெடிகுண்டு வீசப்பட்டிருக்க கூடும் என அமெரிக்க தொண்டு அமைப்பு ஒன்று குற்றச்சாட்டு தெரிவித்தது.

இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ரசாயன தாக்குதல் நடத்திய சிரியா மீது தாக்குதல் நடத்துகிறோம் என அறிவித்தது. அதனை தொடர்ந்து சிரிய ராணுவ தளம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

அதன்பின்னர் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ரசாயன ஆயுதங்களை சிரியா மீண்டும் பயன்படுத்தினால் அந்நாடு மீது போர் தொடுக்க தயார் நிலையில் இருக்கிறோம் என கூறினார்.

இந்த நிலையில், ரசாயன ஆயுதங்கள் தடையமைப்பு என்ற உலக அளவிலான ரசாயன கண்காணிப்பகம் ஆனது சந்தேகத்திற்குரிய இந்த தாக்குதல் பற்றி அவசரகால பேச்சுவார்த்தையை இன்று தொடங்கி உள்ளது. இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாட்டு தூதர்கள் தி ஹேக் நகரில் அமைந்த இந்த அமைப்பின் தலைமையகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தைக்கான கூட்டம் தற்பொழுது தொடங்கி உள்ளது என்று பெயர் வெளியிட விருப்பம் இல்லாத வட்டார தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com