சுமார் 75 நாட்களுக்கு பின்னர் துபாயில் வணிக வளாகங்கள் திறப்பு

சுமார் 75 நாட்களுக்கு பின்னர் துபாயில் வணிக வளாகங்கள் திறக்கப்பட்டன.
சுமார் 75 நாட்களுக்கு பின்னர் துபாயில் வணிக வளாகங்கள் திறப்பு
Published on

துபாய்,

துபாயில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் வணிக வளாகங்கள் (மால்கள்) மூடப்பட்டன.

இந்த நிலையில் சுமார் 75 நாட்கள் ஆன நிலையில், அமீரகத்தில் உள்ள அனைத்து வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களை முழு திறனுடன் திறக்க கடந்த செவ்வாய்க்கிழமை துபாய் அரசு நிர்வாகம் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து நேற்று அவை முழு திறனுடன் திறக்கப்பட்டன.

ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வணிக வளாகங்கள் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. எல்லா இடங்களிலும் அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வதும், வருகிற வாடிக்கையாளர்களுக்கு கை சுத்தம் செய்வதற்கு சானிடைசர் திரவம் வழங்குவதும், நுழைவாயிலில் வெப்ப பரிசோதனை நடத்துவதும் இதில் அடங்கும். கொரோனா சந்தேகத்துக்கு உரியவர்கள் வந்தால் அவர்களை தனிமைப்படுத்தவும் தனி அறைகள் வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள், பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டாலும், மசூதிகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள், பள்ளிகள், நர்சரிகள் மூடப்பட்டுதான் உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com