

அமெரிக்க அதிபராக, தான் பதவியேற்றது முதல் 8 போர்களை நிறுத்தியுள்ளதாகவும் தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு முழுக்க பேசி வந்தார். கடைசியில் நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு அளிக்கப்பட்டது. இதனால் டிரம்ப் ஏமாற்றம் அடைந்தார்.
டிரம்ப் இப்படி பேச வந்த நிலையில், தற்போது அமெரிக்க பாதுகப்புத்துறை அமைச்சர் பீட்டர் ஹெக்சேத், அமெரிக்க ராணுவமே நோபல் பரிசுக்கு தகுதியானது என்ற ரீதியில் பேசியுள்ளார்.
பீட்டர் ஹெக்செத் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டிய ஒரே நிறுவனம் அமெரிக்க ராணுவம்தான்”என்றார். மேலும் அவர் கூறுகையில், ஈரானிய கப்பல்களை முற்றுகையிடும் பணியில் மேலும் ஒரு விமானம் தாங்கிப் போர் கப்பல் இணைய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.