ஆஸ்திரேலியாவில் கனமழை: மோசமான வானிலையால் 100 விமானங்கள் ரத்து

ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
ஆஸ்திரேலியாவில் கனமழை: மோசமான வானிலையால் 100 விமானங்கள் ரத்து
Published on

கான்பெரா,

ஆஸ்திரேலியாவில் புயலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

மேலும் மோசமான வானிலை காரணமாக சிட்னி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் ரெட்பெர்ன் ரெயில் நிலையத்தில் பல்வேறு உபகரணங்கள் சேதமடைந்தன. எனவே அங்கு ரெயில் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் ரெயில் மற்றும் விமான பயணிகள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் பெரும் அவதியடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com