பாகிஸ்தானில் பாடகி ரேஷ்மா கணவரால் சுட்டு கொல்லப்பட்டார்

பாகிஸ்தானில் பாடகி ரேஷ்மா தனது கணவரால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.
பாகிஸ்தானில் பாடகி ரேஷ்மா கணவரால் சுட்டு கொல்லப்பட்டார்
Published on

பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துங்குவாவில் நவ்ஷெரா கலான் பகுதியில் வசித்து வந்தவர் பாடகி ரேஷ்மா. இவர் அந்நாட்டில் புகழ் பெற்ற பேஷ்டோ பாடல்களை பாடி வந்துள்ளார். ஜோபல் கோலூனா என்ற பிரபல நாடகத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், கணவரை பிரிந்து தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரது கணவருக்கு இவர் 4வது மனைவி ஆவார். இந்த நிலையில், அவரது வீட்டிற்குள் நுழைந்த கணவர் ரேஷ்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதில் ரேஷ்மாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இது பாகிஸ்தானின் கைபர் பக்துங்குவாவில் பெண் கலைஞர்களுக்கு எதிராக இந்த வருடத்தில் நடைபெறும் 15வது சம்பவம் ஆகும்.

கடந்த பிப்ரவரி 3ந்தேதி நிகழ்ச்சி ஒன்றில் குற்றவாளியுடன் கலந்து கொள்ள தொடர்ந்து மறுத்து வந்த மேடை நடிகையான சன்புல் சுட்டு கொல்லப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com