

இஸ்லமாபாத்,
இஸ்லாமாபாத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பாகிஸ்தான் ராணுவ தளபதி கூறியதாவது;, இந்தியாவுடனான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலமாகவே அமைதியான தீர்வு காணப்பட வேண்டும். காஷ்மீர் உள்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சின் மூலமாகவே தீர்வு காண முடியும் என பாகிஸ்தான் நம்புகிறது.
உலகின் எல்லாப் பகுதியிலும் ஏதாவது ஒரு மோதல், போர் நடந்து கொண்டு உள்ளது. பேச்சுவார்த்தை மூலமாக எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்பதை பாகிஸ்தான் நம்புகிறது. காஷ்மீர் பிரச்சினைக்கும் இது பொருந்தும்என்றார் .
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு நெருக்கடி முற்றி வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதியின் இந்த கருத்து அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.