

இஸ்லமபாத்,
பாகிஸ்தான் பிரதமர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன்களுக்கு பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. நவாஸ் ஷெரீப் மீதான 2 ஊழல் வழக்குகள் தொடர்பாக வரும் 19 ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பாகிஸ்தானின் தேசிய பொறுப்புடமை முகமை, நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன்கள் பாகிஸ்தான் நிதி மந்திரி இஸாக் தார் ஆகியோர் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்த நிலையில், சம்மன் அனுப்பட்டுள்ளது.