இரு தரப்பு உறவுகளின் பிம்பத்தை காட்டி சார்க் மாநாட்டை இந்தியா சீர்குலைக்கிறது; நவாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு

இரு தரப்பு உறவுகளின் பிம்பத்தை காட்டி சார்க் மாநாட்டை இந்தியா சீர்குலைப்பதாக நவாஸ் ஷெரீப் குற்றச்சாட்டியுள்ளார்.
இரு தரப்பு உறவுகளின் பிம்பத்தை காட்டி சார்க் மாநாட்டை இந்தியா சீர்குலைக்கிறது; நவாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு
Published on

மாலே,

மாலத்தீவு சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், அநநாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் காயூமை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நவாஸ் ஷெரீப், இந்தியாவை கடுமையாக விமர்சித்தார்.

நவாஸ் ஷெரீப் கூறும் போது, இஸ்லமாபாத்தில் கடந்த ஆண்டு நடைபெற இருந்த சார்க் மாநாட்டு தள்ளிப்போகசெய்து தீங்கை இழைக்க காரணமாக இந்தியா இருந்தது. சார்க் மாநாட்டுக்கு கேடு செய்வது என்பது இந்தியாவுக்கு இது முதன்முறையல்ல. பல முறை இந்தியா இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளது. இரு தரப்பு உறவுகளில் உள்ள பிரச்சினைகளை பிம்ப படுத்தி சார்க் மாநாட்டின் உத்வேகத்தை இந்தியா பலமுறை மீறியும் சிதைக்கவும் செய்துள்ளது. இருப்பினும், இஸ்லாமாபாத் சார்க் மாநாட்டுக்கு ஆதரவாக இருந்ததற்காக அப்துல்லா யாமீனுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமபாத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவதாக குற்றம் சாட்டிய இந்தியா பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த சார்க் மாநாட்டை புறக்கணித்தது. இந்தியாவைத்தொடர்ந்து இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான் ஆகிய நாடுகளும் புறக்கணிப்பதாக அறிவித்தன. இதனால், சார்க் மாநாடு தோல்வி அடைந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com