அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி, பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு வசிரிஸ்தானின் பயங்கரவாதிகளுக்கும் பாக்.ராணுவத்தினருக்கும் சண்டை நடைபெற்றது
அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி, பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை
Published on

இஸ்லாமாபாத்,

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தாக்குதலின்போது இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அப்போது பாகிஸ்தான் எல்லையில் காயங்களுடன் விழுந்த இந்திய விமானி அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களில் முக்கியமானவராக இருந்தது மேஜர் சையத் மொய்ஸ் அப்பாஸ் ஷா (வயது 37).

இந்தநிலையில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு வசிரிஸ்தானின் சரரோகா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலில் சையத் மொய்ஸ் அப்பாஸ் ஷா சுட்டுக்கொல்லப்பட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com