பாகிஸ்தானில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி; 17 பேர் மாயம்

பாகிஸ்தானில் ரகாகன் அணையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் பலியானார்கள்.
பாகிஸ்தானில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி; 17 பேர் மாயம்
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் பாஜாயுர் மாவட்டத்தில் உள்ள ரகாகன் அணையில் 18 பேருடன் சென்ற சுற்றுலாப் படகு ஒன்று திடீரென மூழ்கியது. தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக மீட்புக்குழுவினர் சென்ற 2 படகுகளும் மூழ்கின. இதன் பின்னர் அங்கு விரைந்த மற்றொரு மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 4 பேர் பலியானார்கள். 17 பேர் மாயமானார்கள்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிகம் பேர் பயணித்தால் பாரம் தாங்காமல் சுற்றுலாப் படகு மூழ்கியதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com