பாகிஸ்தான்: பஸ் - லாரி மோதி விபத்து - 3 பேர் பலி; 25 பேர் படுகாயம்

கடந்த 24 மணிநேரத்தில் நடந்த 2 விபத்துகளில் மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். 28 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான்: பஸ் - லாரி மோதி விபத்து - 3 பேர் பலி; 25 பேர் படுகாயம்
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் நடந்த இரண்டு வெவ்வேறு விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 28 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

முன்னதாக பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பிஷின் மாவட்டத்தில் பயணிகள் பேருந்தும் லாரி ஒன்றும் மோதியது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்.

மேலும் பஞ்சாப் மாகாணத்தின் ராஜன்பூர் மாவட்டத்தில் வேகமாக வந்த இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com