

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் ராணுவ போர் விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டது. அந்த விமானம், குஜ்ராத் என்ற பகுதியில் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது.
இதில், விமானத்தில் இருந்த 2 விமானிகளும் பலியானார்கள். ஒருவர் பெயர் மேஜர் உமர். அவர் பயிற்சி அளிக்கும் விமானி ஆவார். மற்றொருவர், லெப்டினன்ட் பயாசன். மாணவ விமானி ஆவார். உமர், திருமணம் ஆனவர்.
விமானம் கீழே விழுந்தபோது, நல்லவேளையாக, தரையில் இருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இந்த விபத்துக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகிறார்கள். ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல்கள் கூறப்பட்டுள்ளன.