நாங்கள் தலீபான்களின் செய்தி தொடர்பாளர்கள் அல்ல: இம்ரான்கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர்கள் மத்தியில் நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் தலீபான்களின் செய்தி தொடர்பாளர்கள் அல்ல: இம்ரான்கான்
Published on

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ அல்லது செய்யவில்லையோ, அதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. நாங்கள் அவர்களுக்கு பொறுப்பு இல்லை. நாங்கள் தலீபான்களின் செய்தி தொடர்பாளர்களும் அல்ல.நாங்கள் ஆப்கானிஸ்தானில் அமைதியைத்தான் விரும்புகிறோம். அமெரிக்கா ஆதரவு பெற்ற ராணுவ தீர்வு வேண்டுமா, எல்லோரையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வு வேண்டுமா என்பதை ஆப்கானிஸ்தான் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.பாகிஸ்தானில் 30 லட்சம் அகதிகள் உள்ளனர். 50 ஆயிரம் பேர், 1 லட்சம் பேரைக்கொண்ட அகதிகள் முகாம்கள் உள்ளன. எனவே தலீபான்கள் செயலுக்கு நாங்கள் எப்படி பொறுப்பு ஆக முடியும்?

பாகிஸ்தான் எல்லையில் வேலி போடும் வேலையில் 90 சதவீதத்தை முடித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் நலனுக்காக உள்நாட்டுப்போர் மூள வில்லை.தற்போது எனது அரசு, ஆப்கானிஸ்தானை வெளியில் இருந்து கட்டுப்படுத்த முடியாது என்ற நம்புகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com