பாகிஸ்தான்: வீடு தீ பிடித்து ஒரே குடும்பத்தில் 7 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் நாட்டில் வீடு தீ பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.
பாகிஸ்தான்: வீடு தீ பிடித்து ஒரே குடும்பத்தில் 7 பேர் உயிரிழப்பு
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாட்டின் கிழக்கே பஞ்சாப் மாகாணத்தில் முசாபர்கார் மாவட்டத்தில் வீடு ஒன்றில் திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த வீட்டில் இருந்த 7 பேர் சிக்கி உயிரிழந்து உள்ளனர். அவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர்.

அவர்கள் அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் ஒருவரும் உயிர் தப்பவில்லை. இந்த தீ விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com