மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு: நூலிழையில் உயிர் தப்பிய பாகிஸ்தான் மந்திரி

மர்ம கும்பல் ஒன்று பாகிஸ்தான் மந்திரி காரை சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது.
மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு: நூலிழையில் உயிர் தப்பிய பாகிஸ்தான் மந்திரி
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானின் மந்திரி சபையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரியாக இருந்து வருபவர் ஷிப்லி பராஸ்.

இவர் நேற்று முன்தினம் மாலை கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள கோட் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மர்ம கும்பல் ஒன்று அவரது காரை சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது.

எனினும் இதில் அதிர்ஷ்டவசமாக மந்திரி ஷிப்லி பராஸ் காயங்கள் இன்றி நூலிழையில் உயிர் தப்பினார்.அதே சமயம் இந்த துப்பாக்கிச்சூட்டில் அவரது கார் டிரைவர் படுகாயமடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com