ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினையை இம்ரான்கான் எழுப்புவார் - பாகிஸ்தான் மந்திரி தகவல்

வலுக்கட்டாயமாக ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினையை இம்ரான்கான் எழுப்புவார் என பாகிஸ்தான் மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினையை இம்ரான்கான் எழுப்புவார் - பாகிஸ்தான் மந்திரி தகவல்
Published on

இஸ்லாமாபாத்,

காஷ்மீர் மாநிலம் தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கையை சர்வதேச விவகாரம் ஆக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. இந்த நடவடிக்கை, முற்றிலும் உள்நாட்டு விவகாரம் என இந்தியா, சர்வதேச நாடுகளிடம் விளக்கி விட்டது.

இருப்பினும் பாகிஸ்தான் அடம்பிடித்து வருகிறது.

இந்த நிலையில், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷி, இஸ்லாமாபாத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ஐ.நா. பொதுச்சபையில் அடுத்த மாதம் பேசுகிறபோது பிரதமர் இம்ரான்கான், காஷ்மீர் பிரச்சினையை வலுக்கட்டாயமாக எழுப்புவார் என்று கூறினார்.

மேலும், சிம்லா உடன்படிக்கையின்படி, காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தானும், இந்தியாவும் இரு தரப்பும்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் 5-ந் தேதி எடுத்த நடவடிக்கை இரு தரப்பு நடவடிக்கையா அல்லது ஒருதலைப்பட்சமானதா என்பதை சர்வதேச நாடுகளிடம் பிரதமர் மோடி கூற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com