2 நாள் பயணமாக சீனா சென்றார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

2 நாள் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சீனா சென்றார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 2 நாள் பயணமாக நேற்று சீனா சென்றார். சீன பிரதமர் லீ கெகியாங் விடுத்த அழைப்பின் பேரில் ஷெபாஸ் ஷெரீப் அங்கு சென்றுள்ளார்.

இந்த பயணத்தின்போது அதிபர் ஜின்பிங் உள்பட சீன அரசின் உயர்மட்ட தலைவர்களுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஷெபாஸ் ஷெரீப் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பாகிஸ்தானில் சீனாவில் முதலீடுகள் குறித்தும், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்திற்கான திட்டங்கள் குறித்தும் அவர் முக்கிய ஆலோசனைகளை நடத்துவார் என தெரிகிறது.

ஷெபாஸ் ஷெரீப் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றதற்கு பிறகு முதல் முறையாக சீனா சென்றுள்ளார். அதே போல் சீனாவின் அதிபராக ஜின்பிங் 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டதற்கு பின் அவரை சந்திக்கும் முதல் வெளிநாட்டு தலைவர் ஷெபாஸ் ஷெரீப் ஆவார். இதனால் அவருடைய இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com