

இஸ்லமபாத்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகனான முகம்மது சப்தார் என்பவரை பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு அமைப்பு கைது செய்தது. லண்டனில் இருந்து நாடு திரும்பிய அவரை இஸ்லமாபாத் ரயில் நிலையத்தில் பாகிஸ்தான் போலீஸார் கைது செய்தனர். நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் சொத்துக்குவித்தது தொடர்பான வழக்கில் தேசிய பொறுப்புடமை முன் விசாரணைக்கு ஆஜராக தவறியதால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். முகம்மது சப்தார், நவாஸ் ஷெரீப்பின் மகள் மர்யம் ஷெரீப்பின் கணவர் ஆவார்.
நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்ட சப்தார், தேசிய பொறுப்புடமை முன் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு விடுவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவாஸ் ஷெரீப்பின் மருமகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாகிஸ்தானின் முஸ்லீம் லீக் கட்சியினர் விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இஸ்லமாபத்தில் நேற்று பதட்டம் ஏற்பட்டது.