

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவலை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கைக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டார். அப்போது இலங்கை பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஜெய்சங்கர் பயணம் மேற்கொண்ட பிறகு பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு செல்ல இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.