டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் தொடர்ந்து சரிவு; ஒரு டாலர் ரூ.276 ஆக வீழ்ச்சி

டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ரூ.276 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் தொடர்ந்து சரிவு; ஒரு டாலர் ரூ.276 ஆக வீழ்ச்சி
Published on

பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தானின் பண மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் ஒரு டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ரூ.225 ஆக வீழ்ச்சியடைந்தது. இந்த நிலையில் தற்போது அது மேலும் சரிவை கண்டுள்ளது. அதன்படி ஒரு டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ரூ.276 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் ரெசா பகீர் கூறுகையில், "நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு குறைவது, ஏற்றுமதி சரிவு மற்றும் வெளிநாட்டு பாகிஸ்தானியர்களிடம் இருந்து பணம் அனுப்புவதில் சரிவு ஆகியவை ரூபாயின் மதிப்பை நேரடியாக பாதிக்கிறது. இந்த காரணிகள் மற்றும் உலகளாவிய மந்தநிலை ஆகியவை சந்தையில் எதிர்மறையான உணர்வுகள் மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு பங்களிக்கின்றன. இது உள்ளூர் நாணயத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com